இருளும் ஒளியும் யார்?                                                                                                                               மனிதன்: இருளே, இருக்கின்ற பொருளை இல்லாத போல் காட்டும் உன் இறுமாப்பை ஒளியிடம் மட்டும் ஏன் விட்டுக் கொடுக்கிறாய்? உன் மொத்த அழகும் கத்தையாய் கருப்புக்குள்தான் கலந்திருக்கிறது.பிறகு,ஒலிக்கு மட்டும் ஏன் வழி செய்கிறாய். மாறாத தோரணையும், மயங்குகின்ற உறக்கமும், உன் மடியில்தான் மயங்கிக் கிடக்கிறது. பிறகு,காலை என்ற காட்டான் இடத்தில் ஏன் கரைந்து போகிறது.இருளே! சொல் நீயும் ஒளியும் யார்?எந்தப் பொருளுக்கும் மிரளாத உன் இருள் வெளிச்சத்திடம் மட்டும் ஏன் வெளிச்சமாகிறது.நீ ஒளிக்கு கொடுக்கும்அனுமதியை என்னவென்று எடுத்துக் கொள்வது.உன் அனுமதியை காதலின் அரவணைப்பு என்று ஏற்றுக்கொள்வதா!                              இல்லை;பயத்தின் பரிதாபம் என்று ஏற்றுக்கொள்வதா!              இல்லை;ஒரே நாளுக்குள் மாறி மாறி வருவதால்பழக்கப்பட்ட வனுக்கு பாதகம் செய்யக்கூடாது என்று புரிந்து கொள்வதா!                            இல்லை;ஒருதலைக் காதலின் ஒற்றுமை என்று கூறுவதா, என்னவென்று கூறுவது.இருள்: மனிதா நான் ஒளியிடம் பயந்து ஒலிந்து போகவில்லை.இது இயற்கை இறையின் இருசார் கட்டளை.இது படைத்தவன் செய்த பாதகம்நீ எடுத்து வைத்த வரியில் பயந்து போகிறாய் என்பது பயனற்ற கேள்விஇயற்கையின் விதியில் நான் பணிந்து போகிறேன்.எங்கள் உறவு மனித நாகரிகத்துக்கு ஒட்டாது உறவு.ஒரு தலை காதல் உறவல்ல, ஒருமணி நேரக் காதல் உறவு.இருவரும் எப்பொழுதும் சேர்ந்தே இருக்க மாட்டோம்.                                     ஆனால்சார்ந்தே இருப்போம்.எங்கள் காதல் பணியிடை காதல்                    ஆனால்பறக்காத இடமல்ல;பார்க்காத நாடல்ல;பார்க்காத நாளல்ல;எங்கள் உறவு காதலில் மனிதனுக்கு புலப்படாத நாகரிகம்.இதை புரிந்து கொள்ள மனிதன் நாகரிகத்தின் தொடக்கத்திற்க்கு நகர்ந்து போக வேண்டும்.அண்ட ஆரம்பத்தை அகழ் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.              ஏனென்றால்இயற்க்கை இந்த அண்டத்திற்க்கு கொடுத்த முதல் முத்தமே நாங்கள்தான்!